திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகப் பெரிய தேரோட்டம் 9ம் தேதியான இன்று நடக்கிறது. அ

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகப் பெரிய தேரோட்டம் 9ம் தேதியான இன்று நடக்கிறது. அதன்படி இன்று காலை 7.45 மணியளவில் திருத்தேர் அந்த பகுதியைச் சுற்றி வரத் தொடங்கியது. இன்று தேரோட்டத்தைத் தொடர்ந்து நாளை ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.

இந்த தேர்த் திருவிழாவையடுத்து குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் பொது விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவின்படி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு அலுவலகங்கள், அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.