தர்மசாஸ்திரம் என்று ஒரு வித்யா இருக்கிறது.


அது, வாழ்க்கையின் நடைமுறைகள் - எப்படி வாழவேண்டும் என்பதைத் தெரிவிப்பது. மனிதர்கள் மட்டுமல்ல, இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் எப்படி வாழவேண்டும் என்று சொல்வதே தர்மசாஸ்திரம்.


மனிதர்களைத் தவிர மற்ற ஜீவராசிகள் எப்படி வாழ வேண்டும் என்று தர்மசாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதோ, அப்படி அவை வாழ்வதற்கான சாதனங்களை அழிக்காமல் காப்பாற்றவேண்டியது மனிதர்களின் கடமை. `தர்ம' என்ற சப்தத்துக்கு `அறத்தோடு ஒட்டின வாழ்க்கை' என்று பொருள். இப்படிப் பதினான்கு வித்யாஸ்தானங்கள்.


ஆயுர்வேதம், ஒரு வித்யாஸ்தானம். நம்முடைய சரீரத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ள நமக்கு அறிவுரை வேண்டுமே. இதைச் சொல்வதுதான் ஆயுர்வேதம். 'தனுர்வேதம்' என்று ஒன்று இருக்கிறது. எதிரிகளுடன் போரிட்டு, தன்னுடைய தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமே, அதற்குத்தான் தனுர்வேதம் இருக்கிறது.