காந்தர்வம் - பாட்டு

எல்லோரும் சந்தோஷ மாக ரசித்துக்கொண்டு இருக்கவேண்டும் என்பதற்காக காந்தர்வம் உள்ளது. அர்த்த சாஸ்திரம் - பொருளாதாரம், அரசியல் சட்ட திட்டங்களை எடுத்துச்சொல்வது என்று பதினெட்டு வித்யா ஸ்தானங்கள் உள்ளன.


இந்தப் பதினெட்டு வித்யாஸ்தானங்களில் எல்லாவிதமான அறிவும் அடக்கம். இதில் இல்லாத ஒன்று இன்றைக்கு இருக்கிற மனிதனின் புத்தியில் தோன்றவே தோன்றாது.


இந்தப் பதினெட்டு வித்யாஸ்தானங்களில் இருப்பதை நாம் தெரிந்துகொண்டால், அனைத்தையும் நாம் தெரிந்துகொண்டவர்களாகிவிடுவோம்.


இதில் வேடிக்கை என்னவென்றால், வேதம் எப்போது வந்தது என்று யாருக்கும் தெரியாது. அதனுடைய எல்லையும் யாருக்கும் தெரியாது.


பிற்காலத்தில் ஆங்கிலேயன் நம் தேசத்தைக் கைப்பற்ற ஆட்சி செய்த காலத்தில், பொழுது போகாத வேளைகளில் நம்முடைய வேதங்களைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து, சிந்தித்து அனலைஸ் பண்ணிப் பார்த்தான்.


அவனுடைய மூளையில் ஆதி அந்தத்தில் நம்பிக்கை இல்லை. எனவே, அவனாகவே கற்பனை செய்துகொண்டு, ஒரு ஐயாயிரம் வருஷங் களுக்கு முன்புதான் வேதங்கள் தோன்றின என்று சொல்லி, அவனாக எழுதி வைத்துவிட்டுப் போனான்.


அவன் எழுதி வைத்ததில் நிறைய தவறுகள் இருக்கின்றன. அவன் செய்த எத்தனையோ தவறுகளில் இதுவும் ஒரு தவறு.